March 13, 2025 · கட்டுரைகள் · Articles

திருநெல்வேலியில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மைய்யத்தின் நூலக பொறுப்பாளர் சகோதரர் ஷைக் முஹைதீன் அவர்களின் பதிவு

💥திருநெல்வேலியில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மைய்யத்தின் நூலக பொறுப்பாளர் சகோதரர் ஷைக் முஹைதீன் அவர்களின் பதிவு….✍️

புதிய வரவுகள்:

இம்மூன்று புத்தகங்களும் சகோதரர் ஒருவரால் நிரந்தர தர்மமாக வாங்கி வழங்கப்பட்டன. அல்லாஹ் அதற்கான நன்மைகளை நிரந்தரமாக கொடுத்துக்கொண்டிருப்பானாக..!

அறிமுகம்

மேலுள்ள மூன்று புத்தகங்களுமே உஸ்தாத், இஸ்மாயில் நத்வி அவர்களால் எழுதப்பட்டவை. உஸ்தாத் அவர்கள் அதிக அதிகமாய் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அஹ்லுஸ் ஸூன்னாஹ் வல்-ஜமாஅத்தின் கொள்கையைத் தெளிவாக ஆதாரங்களுடன் எழுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

1. தவறான வாதங்களும் தெளிவான மறுப்புகளும் (354 பக்கங்கள்)

இது உஸ்தாத் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு. தற்காலத்திலுள்ள இணைவைப்புகள் (ஷிர்க்) மற்றும் மார்க்கத்தில் புகுத்தப்பட்ட நூதனமான செயல்களுக்கு (பித்ஆ) ஆதாராங்களுடன் தெரிவிக்கப்பட்ட மறுப்புகள்தான் அந்த கட்டுரைகள். மிகவும் அவசியமான நூல். பல குழப்பங்களுக்கு தெளிவு தரக்கூடியது, இன்ஷா அல்லாஹ்.

2. குர்ஆன் கூறும் தீர்வுகள் (286 பக்கங்கள்)

இதும் உஸ்தாத் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்புதான். இதில் தற்சமயம் உலகமயமாக்கலால் உலகில் நடந்துவரும் குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இஸ்லாமின் நிழலில் தீர்வெழுதியுள்ளார்கள்.

3. வரலாற்றைப் புரட்டிப் போட்ட 100 இஸ்லாமிய ஆளுமைகள் (192 பக்கங்கள்)

இது உஸ்தாத் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல். அரபியில் எழுதப்பட்ட மூல நூலைத் தமிழ்ப்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்கள் தங்களது வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் விதமாகவும் உணர்வு பெறும் விதமாகவும் இது இருக்கும். (இது முதல் பாகம் மட்டுமே. இதில் 20 ஆளுமைகள் மட்டுமே மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவிலேயே மொழிபெயர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறோம், இன்ஷா அல்லாஹ்)


நூலகத்தைப் பயன்படுத்தி கல்வியைக் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சகோதரர் ஷைக் முஹைதீன்,

இஸ்லாமிய அழைப்பு மைய்யத்தின் நூலக பொறுப்பாளர் ,

திருநெல்வேலி.

💬
AI Islamic Assistant

Assalamu Alaikum! Ask me about lectures, courses, books, or general topics on this site.

AI responses may be incomplete. For personal religious rulings, consult a qualified scholar.