August 12, 2024 · கட்டுரைகள் · Articles

பித்ஆ – நூதனம்

பித்ஆ – நூதனம்


அஷ்ஷேக் அப்துர் ரசாக் பின் பத்ர் ஹஃபிழஹுல்லாஹ் (மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர்)

தனது வகுப்பில் இவ்வாறு கூறுகிறார்கள்….

மார்க்கத்தில் நூதனமாக புகுத்தப்பட்ட அனாச்சாரங்களை இலகுவாக இனம் கண்டு கொள்ள வேண்டும் என்றால் பின்வரும் மூன்று கேள்விகளை கேளுங்கள்….

1-நபித்தோழர்கள் இந்த பித்ஆவை பற்றி அறிந்திருக்கிறார்களா ?

இல்லை என்ற பதில் வந்தால் நபித்தோழர்களின் மார்க்க அறிவில் குறை கூறுபவர்களாக (طعن) அவர்கள் அறியாத ஒன்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று கூறி பித்ஆவை இனம் கண்டு கொள்ளலாம்.

2- நபித்தோழர்கள் தாங்கள் புரிந்து வைத்திருக்கும் மார்க்க அறிவை தெளிவாக கூறுவதற்கு சக்தி பெற்று இருக்கிறார்களா ?

இல்லை என்ற பதில் வந்தால் அவர்கள் தெளிவாக சொல்ல முடியாத ஒன்றை நீங்கள் சொல்ல முடியுமா என்று கூறி பித்ஆவை இனம் கண்டு கொள்ளலாம்.

3- நபித்தோழர்கள் இந்த அனாச்சாரங்களை தெரிந்து இருக்கிறார்கள் அதை தெளிவாக கூறுவதற்கு சக்தி பெற்று இருக்கிறார்கள் என்று சொன்னால் எங்கு அதை தெளிவுபடுத்தி கூறியிருக்கிறார்கள் அதற்கு ஆதாரம் கேளுங்கள் .

ஆக இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் நபித்தோழர்கள் அன்று எதை மார்க்கமாக அறியவில்லையோ இன்றும் அது மார்க்கமாக இருக்கப் போவதில்லை .

அகீதா கொள்கை கோட்பாடுகளில்

நாம் கொண்டிருக்கும் வழிகேடான பிழையான கொள்கைகள் என்பது நபித்தோழர்களின் கொள்கை கோட்பாடுகளுடன் பகுப்பாய்வு செய்யும் பொழுது தெளிவாக விளங்கும்.

காரணம் திருக்குர்ஆனையும் நபி மொழிகளையும் நடைமுறைப்படுத்தியவர்கள் அவர்கள், நம்மை விட ஆழமாக தெளிவாக விளங்கியவர்கள் அவர்கள் எனவே குர்ஆன் சுன்னாவை பின்பற்றுவோம் என்று ஒரு அளவுகோலை வைத்து முடிவுக்கு வருவது என்பது எந்த அளவிற்கு சரியான விடயமோ அதேபோன்று குர்ஆன் சுன்னாவை பின்பற்றும் விடயத்தில் நபித்தோழர்களின் விளக்கத்தை அளவுகோலாக வைப்பதும் இன்றியமையாத ஒன்று இல்லை என்றால் வழிகேடு நிச்சயம்.

இமாம் சுஃபியான் சௌரி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பித்அத் பற்றிய அபாயத்தை பற்றி கேட்கப்பட்ட பொழுது இப்லீசுக்கு பித்அத் என்பது பாவம் செய்வதை விட பிடித்தமான ஒன்று, காரணம் பாவம் செய்துவிட்டு பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் பித்அத் செய்பவர் தவ்பா செய்யும் வாய்ப்பை பெறுவதில்லை.

நூல் 📚- மஜ்மவுல் ஃபதாவா- 11/472

  • தமிழில்

உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி

💬
AI Islamic Assistant

Assalamu Alaikum! Ask me about lectures, courses, books, or general topics on this site.

AI responses may be incomplete. For personal religious rulings, consult a qualified scholar.