💥மார்க்க பெயரில் பொதுமக்களை மேலும் மடையர்களாக ஆக்காதீர்கள் …!!!💥
இன்று ஜும்மாவில் ஒரு பள்ளியில் கண்ணியத்திற்குரிய தலைமை இமாம் அவர்கள் நிகழ்த்திய ஜும்மா உரையில் கீழ்கண்ட விஷயங்கள் மனதிற்கு வேதனையையும் கண்டனத்தையும் எழுப்புகிறது,
1-அல்லாஹ் -ரசூல் என்று வேறு ஆக மக்கள் பார்க்கிறார்கள் அதனால் தான் பிரச்சனை வார்த்தைகளில் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் எல்லாம் ஒன்று.
நமது மறுப்பு -👇
(( அல்லாஹு தஃஆலா வணக்கத்திற்குரிய ஒருவன், அகில உலகையும் படைத்து பரிபாலிக்கிறவன், அவனால் அனுப்பப்பட்ட தூதர் படைப்பினங்களில் மிக கண்ணியமிக்கவர் பல சிறப்புகளுக்குரியவர் ஆனால் அல்லாஹ்வும் ரசூலும் எவ்வாறு ஒன்றாக முடியும், இது பல குழப்பங்களையும் இஸ்லாத்தில் தவறான வழிகாட்டலையும் வகுத்து விடும்.
2- திருக்குர்ஆன் இரண்டு இருக்கிறது ஒன்று ஓதப்படுவது மற்றொன்று ஓதப்படாதது , இந்தக் கருத்தை சங்கை மிகு அஷ்ஷைஹ் …… ஹழ்ரத்- பிரபல்யமான அரபுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கூறினார்கள்.
நமது மறுப்பு -👇
((நபிமொழி அதுவும் ஒரு இறை செய்தி வஹி என்று கூறினால் தவறல்ல அதுதான் மார்க்கம் கூறியிருக்கிறது ஆனால் திருக்குர்ஆன் இரண்டு இருக்கிறது ஒன்று ஓதப்படக் கூடியது மற்றொன்று ஓதப்படாதது என்ற வாக்கியங்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை, எந்த அளவுக்கு என்றால் இமாம் அஹ்லுஸ் ஸூன்னா
என்று எல்லாராலும் அழைக்கப்படும்
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் திருக்குரான் அல்லாவின் பேச்சு அதை அவ்வாறே ஈமான் கொள்ள வேண்டும் அது அருளப்பட்டது படைக்கப்பட்டது அல்ல என்ற வாதத்திற்காக பலமுறை சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள் சிறை சென்று இருக்கிறார்கள், இமாம் அப்துல் அஸீஸ் யஹ்யா அல்கினானி (அல்ஹீதது, வல்இஃதிதாரு- الحيدة و للاعتذار புத்தகத்தின் ஆசிரியர் , இமாம் ஷாஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்) திருக்குர்ஆனின் சொல்லாடல் முறைகேடாக அகீதா விடயத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதற்காகவும் அவர்கள் கடுமையான தண்டனைகளை அனுபவித்திருக்கிறார்கள்.
"எனது வார்த்தையான குர்ஆன் என்பது படைக்கப்பட்டது அல்ல ", என்று யார் கூறுவாரோ அவர் பித்அத் செய்து விட்டார், யார் திருக்குர்ஆன் படைக்கப்பட்டது அருளப்பட்டது இல்லை என்று கூறுவாரோ அவர் நிராகரித்துவிட்டார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறுகிறார்கள்.
நூல் 📚 – கிதாபுஸ் ஸுன்னா – பர்பஹாரி- 11/5 ,இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் – இமாம் அபூபக்கர் அல்இஸ்மாயீலி (ஷாஃபி மதுஹபில் தலை சிறந்த இமாம்) -எண் 36 .
இவ்வாறு இருக்க இரண்டு குர்ஆன்கள் என்று கூறுவது எந்த அளவுக்கு ஆபத்தான ஒன்று. ஹதீஸும் இறைச் செய்தி – வஹீ என்று கூறுவது சரி ஆனால் நபிமொழியையும் சேர்த்து இரண்டு குர்ஆன்கள் என்று கூறுவது எவ்வாறு சரியாகும் நபிமொழிகளை வைத்து தொழுகையில் ஓத முடியுமா ?
எனது ஆசிரியரின் கருத்து எவ்வாறு ஆதாரமாகும், திருக்குர்ஆனும் ஸஹீஹான நபி மொழிகளும் மட்டுமே மூல ஆதாரங்களாகும் .
3- இறைதூதுவர்கள் தங்களது தூதுத்துவத்தை நிறைவு செய்யவில்லை முஹம்மது ﷺ அவர்கள் மட்டுமே நிறைவு செய்தார்கள்.
நமது மறுப்பு -👇
((இஸ்லாத்தின் அகீதா -கொள்கை கோட்பாடுகளில் ஆறு விஷயங்களை ஏற்றுக் கொண்டால் தான் ஒருவர் முஸ்லிமாக முடியும் அதில் முக்கியமான ஒன்று ஏனைய நபிமார்களின் வேதங்களையும் அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட விஷயங்களையும் நம்புவது, எல்லா நபிமார்களும் தங்களின் தூதுத்துவத்தை எத்தவைத்து விட்டுதான் சென்று இருக்கிறார்கள் , இறுதியாக வந்த இறைத்தூதர் ﷺ அவர்கள் இந்த தூதுத்துவத்தை முழுமை செய்ய வைத்தார்கள் என்று கூறினால் தவறில்லை, காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆனாக இருப்பதால், ஏனைய நபிமார்களை தரை குறைவாக கூறிவிட்டு நமது நபி அவர்களை உயர்த்தி கூற நமது மார்க்கம் சொல்லவில்லை அதாவது ஏனைய நபிமார்கள் தூதுத்துவத்தை முறையாக சொல்லாமல் இறைவனுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்ற அர்த்தத்தை அது குறிக்கும் அல்லாஹ் பாதுகாப்பானாக))
இது மட்டுமல்லாமல் அதிகமான ஆதாரம் அற்ற பல செய்திகளையும் அவர்கள் குத்பாவில் வழமையாக சொல்வது அவர்களது வழக்கம் அவைகள் எல்லாம் சிறிய தவறுகள் என்று கடந்து விடலாம் ஆனால் தவ்ஹீத் அகீதா இஸ்லாமிய கொள்கை சார்ந்த விஷயத்தில் இந்த அளவுக்கு தைரியமாக பொதுமக்கள் முன்னிலையில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதற்கு முன்பும் பல தடவை ஹஜ்ரத் அவரிடத்தில் நேரடியாகவும் whatsapp , மூலமாகவும் கூறியிருக்கிறேன் ,எனது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் மீண்டும் தவறுகளை செய்ததால் முகநூல் பதிவுகள் ஊடாகவும் இலை மறை காய் மறையாக சொல்லி இருக்கிறேன் இருந்தாலும் அவர்கள் தங்களது தவறுகளை இதுவரை திரித்துக் கொள்ளவில்லை.
எனவே பொதுமக்கள் பயான்களில் குறிப்பாக இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகள் விஷயத்தில் தவறாக மார்க்கத்துக்கு முரணாக பேசப்படும் விடயங்களில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நமக்கு ஆதாரம் அல்குர்ஆன் & ஸஹீஹான நபி மொழியிகள் மட்டுமே, கூடுதலான விளக்கத்திற்கு நபித்தோழர்களின் புரிதலை நாம் நாட வேண்டும், அந்த விளக்கத்தில் பயணித்த சஹாபாக்களின் மாணவர்களான தாபீஃன்கள், நான்கு மதுஹபுகளின் இமாம்கள் கூறும் கருத்துக்களே முறையானது சரியானது.
அதை விட்டுவிட்டு எனது ஆசிரியரின் கருத்து நான் படித்த கல்வி நிலையத்தின் கருத்து அதுவே ஆதாரம் என்று கூறுவது அழகானது அல்ல.
சம்பந்தப்பட்ட அந்த பள்ளியின் இமாமை பல தடவை சந்தித்து தனியாகவும் வாட்ஸ் அப்பிலும் விளக்கம் கேட்டிருக்கிறேன் நான் கூறுவது சரி, எனது ஆசிரியர்கள் இவ்வாறு தான் கூறியிருக்கிறார்கள் நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்னை யாரும் கேட்க முடியாது என்று தான் கூறுகிறார்.
அல்லாஹ் இப்படிப்பட்ட இமாம்களை விட்டும் உம்மத்தை பாதுகாப்பானாக…!!!
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
(அல்குர்ஆன் : 49:6)
- உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி
