June 2, 2026 · நூல் அறிமுகம் · Book Introductions

السلفية الموهومة

🌿நூல் அறிமுகம் 🌿

"السلفية الموهومة"

அஸ்ஸலஃபிய்யா அல்-மவ்ஹுமா

(A Misunderstood Salafiyya)


💥தவறாகக் புரிந்து கொள்ளப்பட்ட ஸலஃபிய்யா"💥

புதிய ஹத்தாதிய்யா -கொள்கையினரின் தக்ஃபீர் (காபீஃர் என்று கூறுதல்/ இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுதல்) பற்றிய கூற்றுகளைத் தகர்த்தல்

ஆசிரியர்:

அஷ்ஷைஹ் கலாநிதி சுல்தான் பின் அப்துர் ரஹ்மான் அல்-உமைரி

((பேராசிரியர் அகீதா துறை,

உம்முல் குறா இஸ்லாமிய பல்கலைக்கழகம்

மக்கா, சவூதி அரேபியா))

முகாரபா பதிப்பகம் மற்றும் விநியோகம்

✨குறிப்பு ✨- சமீபமாக இந்த நூல் அரபு உலகில் வெளிவந்துள்ளது , இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

இந்த நூலின் முன்னுரை & உள்ளடக்கத்தை அரபு மொழியில் பெற்றுக் கொள்வதற்கு 👇

https://1drv.ms/b/c/7b9658e3ebdf7324/IQCSXbUR1-02TLR6gFMxQwcZAd2K6EMs9N4IIqhzR7Z9O14

முன்னுரை (Introduction)

நிச்சயமாகப் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. நாம் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவியும் பாவமன்னிப்பும் தேடுகிறோம்.

நமது உள்ளங்களின் தீமைகளிலிருந்தும், நமது தீய செயல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டினானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது; அவன் எவரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. மேலும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது ﷺ அவர்கள் அவனுடைய அடியாரும் திருத்தூதரும் ஆவார்கள் என்றும் சாட்சி பகர்கிறேன்.

அம்மா பஃது (இதற்குப் பின்):

சமீபத்திய தசாப்தங்களில், எகிப்து நாட்டைச் சேர்ந்த மஹ்மூத் அல்-ஹத்தாத் என்பவருடன் தொடர்புபடுத்தி "ஹத்தாதிய்யா" (Al-Haddadiyyah) என்று அழைக்கப்படும் ஒரு புதிய போக்கு (போரட்டம்/இயக்கம்) தோன்றியுள்ளது.

இந்த நீரோட்டத்திற்குப் பல பண்புகள் உள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான அடையாளம் என்னவென்றால்: ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளை (அல்-ஜுமலல் முத்லகா) கையாள்வதில் தீவிர மிகைப்பு (முபாலகா) செய்வதுடன், அவற்றை மிக விரிவான முறையில் தனிநபர்கள் (الأعيان – அல்அஃயான்) மீது திணிப்பதுமாகும்.

இவர்கள் பல அடுக்குகளாகவும் தர வரிசைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் சிலர் தீவிரமான வரம்புமீறலின் (غلو- குலுவ்) எல்லையை எட்டுகின்றனர், சிலர் அதற்கு கீழ் மட்டத்தில் உள்ளனர்.

தற்போது "ஹத்தாதிய்யா" என்ற கலைச்சொல், ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளைத் தனிநபர்கள் மீது திணிப்பதில் வரம்பு மீறிச் செயல்படும் மற்றும் ஸலஃபி மத்ஹபின் மார்க்க அறிஞர்களின் – குறிப்பாக இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் போன்றோரின் – வழிமுறைக்கு முரணாகச் செயல்படும் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறியுள்ளது.

இந்தத் தசாப்தங்களில் இந்த நீரோட்டம் பல கட்டங்களாகத் தோன்றி மறைந்துள்ளது. அதன் மிகச் சமீபத்திய வெளிப்பாடு கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்ததாகும். அதே சிந்தனையைக் கொண்ட சில புதிய அழைப்புகள் தோன்றியுள்ளன – அதாவது, ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளைத் தனிநபர்கள் மீது திணிப்பதில் எல்லையைக் கடப்பது.

இருப்பினும், இவர்கள் மஹ்மூத் அல்-ஹத்தாத் வழிநடத்திய முந்தைய அலையிலிருந்து சில விஷயங்களில் வேறுபடுகிறார்கள்.

புதிய ஹத்தாதிய்யா அலையின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று: ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளை 'பித்அத்வாதி' (تبديع-தப்தீஃ) மற்றும் 'காஃபிர்' (தக்ஃபீர்-تكفير) எனத் தீர்ப்பளிக்கும் விவகாரங்களில் மிகைப்படுத்தப்பட்ட முறையில் கையாள்வதாகும்.

பழைய ஹத்தாதிய்யா இயக்கத்தின் தலைவர்கள் ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளை 'பித்அத்வாதி' என்று தீர்ப்பளிப்பதில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தினர் (அவர்கள் தக்ஃபீர் பக்கமும் சென்றிருந்தாலும், அதில் அவர்களின் கவனம் குறைவாகவே இருந்தது).

ஆனால் புதிய அலையினரோ, ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளை 'பித்அத்வாதி' மற்றும் 'காஃபிர்' என்று தீர்ப்பளிக்கும் இரண்டு விவகாரங்களிலும் மிக விரிவாகவும் வரம்புமீறியும் தனிநபர்கள் மீது திணிக்கின்றனர்.

இதனால் இந்த இரண்டு விவகாரங்களிலும் அவர்களின் பேச்சுகளும் வாதங்களும் மலிந்து விரிவடைந்துள்ளன.

அவர்களின் பேச்சுகளில் மிக விசித்திரமான வாசகங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. அவர்களின் வாதங்களைக் கவனிப்பவர் பின்வரும் விசித்திரமான கூற்றுகளைப் படிக்க நேரிடும்:

  • "இமாம் அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் பல தனிநபர்களைக் காஃபிர் என்று தீர்ப்பளித்தார்; தூதர் கொண்டு வந்த விஷயங்கள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்ததா இல்லையா, அல்லது அவர்கள் ஏதேனும் தவறான விளக்கத்தில் (தஃவீல்) இருந்தார்களா என்பதைப் பற்றியெல்லாம் அவர் ஆராயவில்லை.

மாறாக, அவர்களின் குஃப்ரிய்யதான தீய பேச்சைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்தத் தீர்ப்பை வழங்கினார்."

  • "நுஐம் பின் ஹம்மாத் என்பவர் சுன்னாவைப் பாதுகாப்பதிலும் ஜஹ்மிய்யாக்களை எதிர்ப்பதிலும் எவ்வளவு பெரிய உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டவர்!

அப்படி இருந்தும், அவர் ஜஹ்மிய்யாக்களின் கொள்கை போன்ற ஒரு கூற்றைக் கூறினார் என்பது இமாம் (அஹ்மத்) அவர்களுக்குத் தெரிந்தவுடன், இந்த அஹ்லுஸ் ஸுன்னா கொள்கையைச் சார்ந்த நல்ல இமாமிடம் நேரில் பேசாமலும், அவரிடம் ஆதாரத்தை நிலைநாட்டாமலும், அல்லாஹ் அவரது கப்ரில்(மண்ணறையில்) அவருக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என்று இமாம் அஹ்மத் சாபமிட்டார்."

  • "இமாம் அஹ்மத் அவர்கள் அல்-மஃமூன், அல்-கராபீஸி, அஷ்-ஷராக் போன்றோரை தக்ஃபீர் செய்தார்.

ஆனால் அவர் அவர்களில் ஒருவரைக் கூட நேரில் சந்தித்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

அஷ்-ஷராக் என்பவர் இவரிடம் கல்வி கற்றவர் தான், ஆனால் அவர் 'லஃப்ழ்' வார்த்தை(குர்ஆன் ஓதப்படும் எனது சப்தம் படைக்கப்பட்டது) என்ற கொள்கையைக் கூறியபோது தூரத்தில் இருந்தார். இமாம் அஹ்மத் அவரையோ மற்றவர்களையோ சந்திக்கவும் இல்லை, அவர்களுடன் அமரவும் இல்லை, அவர்களிடம் ஆதாரத்தை நிலைநாட்டவும் இல்லை."

  • "ஜஹ்மிய்யாக்களின் கொள்கையையோ அல்லது அதில் சில பகுதியையோ கூறிய பல அறிஞர்களை இமாம் அஹ்மத் தக்ஃபீர் செய்தார், அவர்களுக்கு எதிராகப் பிரார்த்தித்தார். அவர்களின் நன்மைகளையோ, அவர்கள் இஸ்லாத்திற்குச் செய்த சேவைகளையோ, அவர்கள் தவறுதலாகவும் விளக்கக் குறைபாட்டினாலும் (தஃவீல்) அவ்வாறு கூறினார்கள் என்பதையோ, வழிபாடுகளில் அவர்களின் சிறப்பையோ, அல்லது அவர்களிடம் ஆதாரம் நிலைநாட்டப்படவில்லை என்பதையோ அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை."

இந்த அனைத்து ஹத்தாதிய்யா நீரோட்டங்களுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால், ஸலஃப் இமாம்களின் பொதுவான (முத்லக்) கூற்றுகளைக் கையாள்வதில் தீவிர வரம்புமீறல் (குலூ) செய்வதாகும். எனவே,

இவர்களை "குலாத் அல்-இத்லாக்" غلاة الإطلاق (பொதுவான கூற்றுகளைத் தீவிரமாகத் திணிப்பவர்கள்) என்று அழைப்பது பொருத்தமானதாகும். அதாவது, ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளைக் கொண்டு குறிப்பிட்ட மனிதர்களைப் பித்அத்வாதி அல்லது காஃபிர் என்று தீர்ப்பளிப்பதில் வரம்பு மீறுபவர்கள் என்பது இதன் பொருளாகும்.

இந்தப் புதிய ஹத்தாதிய்யா அலையின் மிக முதன்மையான தலைவர்களில் ஒருவராக அப்துல்லாஹ் அல்-குலைஃபி

عبد الله الخليفي

(Abdullah Al-Khulaifi) திகழ்கிறார்.

அவர் சில வருடங்களுக்கு முன்பு இணையதளங்களில் தோன்றி, தக்ஃபீர்تكفير , தப்தீஃتفسيق மற்றும் தழ்லீல்تضليل (வழிகெட்டவர் எனல்) ஆகிய விவகாரங்களில் மிக விசித்திரமான கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தார்.

ஸலஃப் இமாம்களின் பொதுவான கூற்றுகளைத் தக்ஃபீர் விவகாரத்தில் திணிப்பதில் தீவிர மிகைப்பைக் கொண்ட கொள்கைகளை அவர் தீவிரமாகப் பரப்பினார்.

அதற்கு ஆதரவாக ஸலஃப் இமாம்களிடமிருந்து ரிவாயத் செய்யப்பட்ட ஏராளமான செய்திகளை (ஆஸார்) திரட்டினார்.

தான் பரப்புவதுதான் மாற்றுக்கருத்துடையோரைத் தக்ஃபீர் செய்வதிலும் வழிகெட்டவர்களாக ஆக்குவதிலும் ஸலஃபுகள் இருந்த வழிமுறை என்று வாதிட்டார்.

அப்துல்லாஹ் அல்-குலைஃபி தான் பின்பற்றும் இந்த அடிப்படைகளையும் வாதங்களையும் எந்தவொரு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட புத்தக வடிவிலோ அல்லது முறையான மார்க்கப் பாடங்களிலோ விவரிக்கவில்லை. மாறாக, அவற்றை ஆங்காங்கே சிதறிய வடிவங்களிலேயே பரப்பினார். தக்ஃபீர் விவகாரத்தில் அவரது அணுகுமுறை பெரும்பாலும் 'அழிப்பதாக' (ஹத்மி حطمي- நாசகார முற்போக்கு) மட்டுமே அமைந்திருந்தது.

அறியாமை மற்றும் தஃவீல் (தவறான விளக்கம்) ஆகியவற்றின் காரணமாக மன்னிப்பு வழங்குவதை

(இஃதார் பில்ஜஹ்ல் & தஃவீல்

اعذار بالجهل والتأويل)

பல இடங்களில் அவர் கடுமையாக விமர்சிப்பதைக் காணலாம்.

ஜஹ்மிய்யாக்கள் போன்றோர் விஷயத்தில் (அல்-ஹுக்ம் அல்-முத்லக்)பொதுவான தீர்ப்புக்கும் (அல்-ஹுக்ம் அல்-முஅய்யன்) குறிப்பிட்ட நபர் மீதான தீர்ப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் அவர் மறுக்கிறார்.

ஆனால், அவர் எந்தவொரு அடிப்படை விதிகளையோ அல்லது கோட்பாடுகளையோ தெளிவாக விளக்குவதில்லை; தக்ஃபீர் செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் அதைத் தனிநபர்கள் மீது திணிப்பதற்கான நெறிமுறைகள் பற்றிய தனது விரிவான பார்வையை அவர் முன்வைப்பதில்லை.

தனது சொந்தப் பார்வையை முறையாகக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தாமல், மற்றவர்களை விமர்சிப்பதிலேயே அவரது அணுகுமுறை பெரும்பாலும் சுருங்கிவிடுகிறது!

நீண்ட காலத்திற்குப் பிறகு, தக்ஃபீர் மற்றும் தப்தீஃ விவகாரங்களில் அவர் பின்பற்றும் வழிமுறையின் அடையாளங்கள் தெளிவாக வெளிப்படத் தொடங்கின.

அப்போது, அவரது விரிவான தீர்ப்புகளிலும், அவரைப் பின்பற்றித் தாக்கம் பெற்றவர்களின் தீர்ப்புகளிலும் மார்க்க அறிஞர்களின் வழிமுறைகளுக்கு முற்றிலும் முரணான தடுமாற்றங்களும் குழப்பங்களும் பெருமளவில் இருப்பது அம்பலமானது.

அவரது கொள்கைகளின் அடையாளங்கள் வெளிப்பட்டபோது, அவரது அடிப்படை வாதங்களில் புரிந்துகொள்ளலிலும், கட்டமைப்பிலும், விதியை உற்றுநோக்குவதிலும் எவ்வளவு பெரிய பலவீனமும் குறைபாடும் உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஸலஃப் இமாம்களின் கூற்றுகளைப் புரிந்துகொள்வதில் அவர் செய்துள்ள மாபெரும் தவறுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இத்தவறுகள் தத்துவவாதிகள் (முதகல்லிமூன்) உள்ளிட்ட பல மாற்றுக்கருத்துடையோரின் மீது மாபெரும் வெளிப்படையான தவறான தீர்ப்புகளை வழங்க அவரை இட்டுச் சென்றன.

மேலும், அவரது பேச்சுகள் ஸலஃபி கொள்கையின் அறிஞர்களுக்கு – குறிப்பாக இப்னு தைமிய்யாவிற்கு – முற்றிலும் முரணாக இருப்பதும், அதற்கு மேலாக ஆரம்பகால முன்னோடி ஸலஃப் இமாம்களின் நடைமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதும் நிரூபணமானது.

இந்த வழிதவறலும் பலவீனமும் வெளிப்பட்டபோது, அவர் முன்வைக்கும் வாதங்களை மிகவும் நிதானமான, அறிவியல் பூர்வமான முறையில் விவாதிப்பது அவசியமாகியது.

அப்போதுதான் அவரது பேச்சில் உள்ள விலகல்களும் மாபெரும் குறைபாடுகளும், அவரது வாதங்களில் உள்ள போலித்தனமும் தவறுகளும் வெளிப்படும்.

அறிஞர் அப்துல்லாஹ் அல்-குலைஃபி தனது கருத்துக்களை செப்பனிடப்பட்ட ஒரு புத்தகமாகவோ அல்லது குறிப்பிட்ட பாடங்களாகவோ தொகுக்கவில்லை; மாறாக ஆங்காங்கே சிதறிய பேச்சுகளாகவே அமைத்திருந்தார். இது அவரது வாதங்களையும் அடிப்படைகளையும் ஆய்வு செய்வதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், நான் அவர் எழுதிய அனைத்தையும் வாசிப்பதிலும், தக்ஃபீர் விவகாரம் தொடர்பாக அவர் பேசிய பெரும்பாலான உரைகளைக் கேட்பதிலும் என்னால் இயன்றவரை கடுமையாக உழைத்தேன்.

ஹத்தாதிய்யா நீரோட்டத்தின் பிற தலைவர்களை விட குலைஃபி சில விஷயங்களில் தனித்துவம் பெற்று விளங்குகிறார்:

1️⃣. முதலாவது:

ஹத்தாதிய்யா கருத்துக்களைப் பரப்புவதற்காக அதிகளவிலான கட்டுரைகளையும், ஒலிவடிவ உரைகளையும் வெளியிடுதல்.

2️⃣. இரண்டாவது:

தங்களது புதிய கொள்கையையும் பிரிவையும் நிறுவுவதற்காகப் பல புதிய வாதங்களைக் கண்டுபிடித்தல்; இவற்றில் பெரும்பாலானவை அவரது சுய கண்டுபிடிப்புகளாகும்.

3️⃣. மூன்றாவது:

தான் ஏற்கும் விவகாரங்கள் குறித்து மிக அதிகமாக விவாதிப்பதும் தர்க்கம் செய்வதும் ஆகும். இந்த வீண் விவாதங்கள் அவரது கொள்கைகளில் மறைந்திருந்த பல தவறான விளைவுகளையும் (லவாஜிம்) அவர் வற்புறுத்தி ஏற்கும் நிலைக்கு அவரைத் தள்ளின.

4️⃣. நான்காவது:

தனது பேச்சுகளில் ஸலஃபுகளின் செய்திகளை (ஆஸார்) மிக அதிக அளவில் கொண்டு வருதல். குலைஃபி ஸலஃபுகளின் வாசகங்களை மிக அதிகமாகவும் அடர்த்தியாகவும் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்.

இதனால், ஆரம்பநிலை மார்க்க மாணவர்கள் இவர் ஸலஃபுகளின் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்துள்ளார் என்றும், அவர்களின் கூற்றுகளை நன்கு மனனம் செய்துள்ளார் என்றும், ஸலஃபுகளின் பெயரால் தான் பேசுகிறார் என்றும் மாயையாக நம்பிவிடுகின்றனர்.

ஆனால் யதார்த்தத்தில், அந்தச் செய்திகளை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியாது; அவற்றின் நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் அவர் அறியவில்லை. அவற்றில் பலவற்றைத் தவறாகவே புரிந்து கொண்டுள்ளார்.

5️⃣. ஐந்தாவது:

தனக்கு மாறுபடுபவர்களின் நோக்கங்களை மிக விரிவாகப் பகுப்பாய்வு செய்து, அவற்றை மனிதநேய அல்லது மதச்சார்பற்ற கொள்கைகளின் வெளிப்பாடு என்று கூறுவது, அல்லது அவர்கள் உண்மையை நாடாமல் ஏமாற்றுகிறார்கள் என்று கூறுவது, அல்லது அவர்கள் ஜஹ்மிய்யாக்களைப் பாதுகாக்கிறார்கள் என்று பழி சுமத்துவதுமாகும்.

குலைஃபியை எதிர்ப்பவர்களில் எவரொருவரும் அவரது பார்வையில் நோக்கம் மற்றும் எண்ணத்தில் குற்றம் சுமத்தப்படாமல் தப்புவதில்லை. குலைஃபியின் தக்ஃபீர் மிகைப்பை மறுக்கும் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் – அவரது வாதப்படி – அல்லாஹ்வின் முகத்தை நாடி மறுக்கவில்லை; அவர் மாற்றுக்கருத்துடையவர்கள் மீது 'கல்வி ரீதியான நயவஞ்சகம்' (அந்-நிஃபாக் அல்-இல்மி) என்ற குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார், மேலும் அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகம் (நிஃபாகுல் கல்ப்) இருப்பதையும் நான் மறுப்பதற்கில்லை என்று குறிப்பிடுகிறார்!

6️⃣. ஆறாவது:

இப்னு தைமிய்யாவின் பெயரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும், தக்ஃபீர் மற்றும் தப்தீஃ விவகாரங்களில் இப்னு தைமிய்யா தமக்கு உடன்படுகிறார் என்று காட்டுவதற்குச் தீவிரமாக முயல்வதுமாகும்.

தக்ஃபீர் விவகாரத்தில் தனது கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் என்று தான் கருதும் இப்னு தைமிய்யாவின் கூற்றுகளைப் பெருமளவில் திரட்ட குலைஃபி கடுமையாக உழைத்துள்ளார்.

அதே சமயம், தனது கொள்கைக்கு முற்றிலும் முரணாக மிகத் தெளிவாக இருக்கும் இப்னு தைமிய்யாவின் அனைத்து கூற்றுகளின் மீதும் சந்தேகங்களையும் ஆட்சேபனைகளையும் கிளப்ப முயல்கிறார்.

இதன் மூலம் இப்னு தைமிய்யா தனது நிலைப்பாடுகளில் முரண்பட்டவர் போன்றோ, அல்லது அவர் பேசும் விவகாரங்களில் அவருக்கு என்று செப்பனிடப்பட்ட கொள்கை எதுவும் இல்லை என்பது போன்றோ ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.

இப்னு தைமிய்யா அஷ்அரிய்யா அறிஞர்களில் பெரும்பாலானோரை தக்ஃபீர் செய்தார் என்ற அவரது வாதத்தை விவாதிக்கும் போது இது நிரூபிக்கப்படும்.

குலைஃபியின் இந்தச் செய்கை மற்ற ஹத்தாதிய்யாக்களிடமிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில், மற்ற ஹத்தாதிய்யாக்கள் இப்னு தைமிய்யா தங்களது கொள்கைக்கு மாறுபடுகிறார் என்பதை உணர்ந்தபோது, இப்னு தைமிய்யாவை வழிதவறியவர் என்றும், ஸலஃபுகளின் கொள்கையை மாற்றியவர் என்றும் நேரிடையாகவே விமர்சித்தனர்.

ஆனால் குலைஃபியோ, இப்னு தைமிய்யாவுக்கு மாறுபடுவதாக பகிரங்கமாக அறிவித்தால் அது தனது வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும் என்றும் மக்கள் தன்னை விட்டும் வெருண்டோடுவார்கள் என்றும் அறிவர்; எனவேதான் இப்னு தைமிய்யாவின் பெயரைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து வகையான வற்புறுத்தல்களையும் கையாளுதல்களையும் செய்கிறார்.

7️⃣. ஏழாவது:

திட்டமிடலும் ஒழுங்கமைப்பும் ஆகும்.

கலைஃபியும் அவருடன் இருப்பவர்களும் தங்களது கருத்துக்களை மிகவும் திட்டமிட்ட முறையில் பரப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களிடம் பல ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் உள்ளன; பணிகளையும் பொறுப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு செயல்படுகின்றனர்.

இந்த ஆய்வு நூலானது, குலைஃபியும் பிற புதிய ஹத்தாதிய்யாக்களும் 'தக்ஃபீர்' (காஃபிர் எனல்) விவகாரத்தில் முன்வைக்கும் வாதங்களை விவாதிப்பதற்காக மட்டுமே பிரத்யேகமாக எழுதப்பட்டதாகும். 'தப்தீஃ' (பித்அத்வாதி எனல்) மற்றும் 'தழ்லீல்' (வழிகெட்டவர் எனல்) ஆகிய விவகாரங்களை நான் இதில் குறிப்பிடவில்லை;

ஏனெனில் அவை குலைஃபி மற்றும் அவருடன் இருப்பவர்களிடம் தனித்துவமான விதிகளையும் வாதங்களையும் கொண்ட வெவ்வேறான தலைப்புகளாகும்.

அல்லாஹ் கிருபை செய்தால் அதனை மற்றொரு ஆய்வில் கையாளுவேன் என நம்புகிறேன்.

புதிய ஹத்தாதிய்யாக்களின் பேச்சுகளிலிருந்து என்னால் திரட்ட முடிந்த விபரங்களின் அடிப்படையில், அவர்களிடம் இருபதுக்கும் மேற்பட்ட முக்கியக் கூற்றுகள் இருப்பது தெரியவந்தது.

புதிய ஹத்தாதிய்யாக்கள் தக்ஃபீர் விவகாரத்தில் தங்களது வழிதவறிய கொள்கையை இந்த அடிப்படைகளின் மீதே கட்டமைக்கின்றனர்.

(புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணையில் 1 முதல் 23 வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன).

இந்த வாதங்கள் அனைத்தும் ஹத்தாதிய்யாக்களிடம் சமமான தாக்கத்தையோ அல்லது ஒரே மாதிரியான அந்தஸ்தையோ கொண்டிருக்கவில்லை; அவை வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

இருப்பினும், தக்ஃபீர் விவகாரத்தில் ஹத்தாதிய்யாக்களின் ஒட்டுமொத்த விலகலின் தன்மையை வாசகர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக எந்தவொரு பாகுபாடுமின்றி அவை அனைத்தையும் இங்கே வரிசையாகக் குறிப்பிட்டுள்ளேன்.

இதில் பல விரிவான கிளை வாதங்களும் அடங்கியுள்ளன, அவற்றிற்கு நான் தனித்தனி தலைப்புகளை ஒதுக்கவில்லை; மாறாக மேலே குறிப்பிட்ட முக்கிய வாதங்களின் ஊடே அவற்றை விவாதித்துள்ளேன்.

'பெரிய ஷிர்க்' (அஷ்-ஷிர்க் அல்-அக்பர்) மற்றும் வெளிப்படையான விவகாரங்களில் அறியாமையை ஒரு மன்னிப்பாக ஏற்பதை மறுக்கும்

المنع من اعذار بالجهل(அல்-மன்ஃஉ மின் அல்-இஃதார் பில்-ஜஹ்ல்) முக்கிய விவகாரத்தை நான் இந்த வாதங்களின் பட்டியலில் சேர்க்கவில்லை;

ஏனெனில் இதில் அவர்களிடம் புதிய கருத்து எதுவும் இல்லை என்பதனாலும், இந்த ஒரு விவகாரத்திற்காகவே நான் ஏற்கனவே

إشكالية اعذار بالجهل في البحث العقدي

'இஷ்காலிய்யத்துல் இஃதார் பில்-ஜஹ்ல் ஃபில்-பஹ்தில் அகதி' என்ற தனி நூலை எழுதியுள்ளதனாலும் ஆகும்.

இந்த நூலை அரபு மொழியில் வாசிக்க 👇

https://1drv.ms/b/c/7b9658e3ebdf7324/IQAzjNB-laU9RoeewDeG-T5SAcLLzqqLg-T4Hq5IFCmUIkA

இந்த வாதங்களைத் திரட்டுவதிலும், அது குறித்த ஹத்தாதிய்யாக்களின் உண்மையான பார்வையைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதிலும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் சான்றுகளையும் ஆதாரங்களையும் சேகரிப்பதிலும் நான் பெரும் சிரமங்களை எதிர்கொண்டேன்.

ஏனெனில், அவர்களின் முதன்மைத் தலைவரான குலைஃபி தனது பேச்சுகளை முறையாகச் செப்பனிடுவதோ அல்லது விதிகளை ஒழுங்குபடுத்துவதோ இல்லை;

மாறாக எவ்விதப் பொறுப்புமின்றி ஆங்காங்கே வீசி எறிகிறார். இது அவர்களின் உண்மையான பார்வையை முழுமையாகத் திரட்டுவதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், நான் குலைஃபி கூறுவதோடு மட்டும் சுருக்கிக் கொள்ளவில்லை; மாறாக இந்த வழிதவறிய சிந்தனையில் அவருடன் பங்கெடுக்கும் பிற நபர்கள் முன்வைக்கும் பல கருத்துகளையும் விவாதித்துள்ளேன்.

ஆயினும் குலைஃபியின் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டது; ஏனெனில் அவரே இந்தச் சிந்தனையின் முதன்மையான தலைவராகவும், இதற்கு அதிகளவில் விதிகளை உருவாக்குபவராகவும், இதனை ஆதரிக்கும் கருத்துகளைப் பரப்புபவராகவும் திகழ்கிறார்.

இந்த வாதங்களை விவாதிப்பதற்கும், அவற்றில் உள்ள குறைபாடுகளையும் விலகல்களையும் விளக்குவதற்கும் முன்னால் இரண்டு அறிமுகங்களை (تمهيدين) அமைத்துள்ளேன். முதலாவது அறிமுகத்தில் புதிய ஹத்தாதிய்யா நீரோட்டத்துடனான (குலைஃபி அதன் முக்கிய குறியீடு) உண்மையான கருத்து வேறுபாட்டின் தன்மையையும், அவரது அறிவியல் வழிமுறையின் முக்கிய அடையாளங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.

இரண்டாவது அறிமுகத்தில் ஹத்தாதிய்யாக்கள் விழுந்துள்ள வழிமுறை சார்ந்த தவறுகளின் அடிப்படைகளைக் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த முன்னுரையின் நிறைவாக, இந்த ஆய்வின் விபரங்களைத் திரட்டுவதற்கும், அதனை இந்த உன்னதமான முறையில் அமைப்பதற்கும் கிருபை செய்த அல்லாஹ்விற்கு எனது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்; அவன் மட்டுமே அனைத்துப் பாக்கியங்களையும் அருட்கொடைகளையும் வழங்குபவன் ஆவான்.

அதற்கடுத்து, இந்த ஆய்வில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த விபரங்களைத் திரட்டுவதில் எனக்குப் பெரிதும் உதவிய சகோதரர் முராத் அல்-ஸரீபீத்தி அவர்களுக்கு எனது நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்;

அவரது பல கருத்துகளும் ஆய்வுகளும் எனக்குப் பெரிதும் பயனளித்தன. மேலும், இந்நூலை மறுஆய்வு செய்து, இதனை இன்னும் செப்பனிடுவதற்கும் தரப்படுத்துவதற்கும் பல ஆலோசனைகளை வழங்கிய கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை வழங்குவானாக.

அல்லாஹ் இந்தச் சேவையை அல்லாஹு தஃஆலாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்கவும், இதனை அவனது கண்ணியமிக்க முகத்திற்காக மட்டுமே தூய்மையானதாக ஏற்றுக் கொள்ளவும்,

இதன் மூலம் மார்க்க மாணவர்களுக்கும் பிறருக்கும் பயனளிக்கச் செய்யவும் பிரார்த்திக்கிறேன். மேலும், இந்த வாதங்களில் உள்ள உண்மையை அறிந்துகொள்வதற்கும், அந்த வழிதவறலில் உள்ள குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டுகொள்வதற்கும் இதனை ஒரு வழிகாட்டியாக ஆக்குமாறு அவனிடம் வேண்டுகிறேன்.

📚 டாக்டர் அஷ்ஷைஹ் சுல்தான் அல்உமைரி ஹபிஃழஹுல்லாஹ்

✍️ மொழிபெயர்ப்பு

உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

All 18 parts
  1. முஃப்தி ஷெய்க் சாலிஹ் அல்-ஃபௌசான் அவர்கள் முன்னுரை எழுதிய நூல்
  2. Meendum Islathai Nokki
  3. எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே” என்ற நூலின் சுருக்கம்
  4. ((அகீதா))
  5. الدروس المهمة لعامة الأمة
  6. الداعية الى التوحيد في ديار التصوف
  7. இமாம் ஷாபியீ அவர்களின் கொள்கை விளக்கம்
  8. السلفية الموهومة
  9. அஹ்லுஸ் சுன்னாவினரே! அஹ்லுஸ் சுன்னாவினரிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்
  10. அல்லாஹ்வின் பண்புகளாகிய ‘இஸ்திவா’ மற்றும் ‘உலுவ்’ குறித்த கருத்து முரண்பாடுகளும் – மார்க்க அறிஞர்களின் தெளிவான மூல ஆதாரங்களும்
  11. சமகால நாத்திக வாதமும் அதற்கான இஸ்லாமிய அறிவுசார் எதிர்வினைகளும்
  12. Contemporary Atheism and Islamic Intellectual Responses to It
  13. பிரபல அரபுச் சுவடிகள் ஆய்வாளர் அஹ்மத் ஷாகிரின் நூலாய்வு முறைமை: ஆய்வாளர்களுக்கான ஒரு வழிகாட்டி
  14. அங்கிள் சாம் (Uncle Sam ) ஒரு சூஃபியாக மாறும்போது!!
  15. قَاعِدَةٌ فِي تَحْقِيقِ التَّوْحِيدِ الْعَمَلِيِّ وَسَدِّ ذَرَائِعِ الشِّرْكِ
  16. ஷேக் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்திக்கும் அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளில் நடுநிலைமை பேணுதல் (இன்ஸ
  17. நவீன மார்க்கச் சட்டவியலில் பிஃக்ஹுல் மகாஸித் (மார்க்க நோக்கங்களின் சட்டம்): ஒரு முக்கிய ஆய்வுநூல் அறிமுகம்
  18. ஸஃப்வதுல் ஃபவாயித்
💬
AI Islamic Assistant

Assalamu Alaikum! Ask me about lectures, courses, books, or general topics on this site.

AI responses may be incomplete. For personal religious rulings, consult a qualified scholar.