💥தொடர்-3️⃣1️⃣💥
ஸலப்ஃ அறிஞர்களின் அழகிய உரைகள் .
🌿பாவங்களை அழித்து நரக தண்டனையிலிருந்து காக்கும் 10 வழிகள்!🌿
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறியாமையினாலோ அல்லது பலவீனத்தினாலோ சில பாவங்களைச் செய்துவிடுகிறோம். மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துச் சுவனம் செல்லவும், நமது பாவங்களை அழித்துக் கொள்ளவும் மார்க்கத்தில் வழிகள் உள்ளனவா?
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஆதாரங்களிலிருந்து, ஒரு அடியானின் பாவங்களை அழித்து தண்டனையிலிருந்து காப்பாற்றும் 10 முக்கியக் காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார்கள்.
அரபு மொழியில் கேட்க 👇
1️⃣. தவ்பா (பாவமன்னிப்புத் தேடுதல்)
உண்மையான மனவருத்தத்துடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவது மிக எளிமையான மற்றும் முதன்மையான வழியாகும். எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், உண்மையாகத் தவ்பாச் செய்யும்போது அல்லாஹ் அதனை முழுமையாக மன்னிக்கிறான்.
2️⃣. இஸ்திக்பார்
(மன்னிப்புக் கோருதல்)
தினமும் அல்லாஹ்விடம் "இறைவா! எனது பாவங்களை மன்னிப்பாயாக" என்று தொடர்ச்சியாகப் பிரார்த்திப்பது பாவங்களை அழித்து நரக தண்டனையிலிருந்து காக்கிறது.
3️⃣ பாவங்களைப் போக்கும் நற்செயல்கள் (الحسنات الماحية)
நாம் செய்யும் நன்மைகள் நமது பாவங்களை அழித்துவிடும்.
"நிச்சயமாக நன்மைகள், தீமைகளைப் போக்கிவிடும்…" (அல்குர்ஆன் 11:114)
ஐவேளைத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, ரமழான் நோன்பு போன்றவை அதற்கு இடைப்பட்ட காலத்தில் செய்யும் சிறிய பாவங்களுக்குக் பரிகாரமாக அமைந்து அவற்றை அழித்துவிடுகின்றன.
4️⃣. மூஃமின்கள் செய்யும் துஆ (ஜனாஸா தொழுகை)
ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காகச் செய்யும் பிரார்த்தனை பயனளிக்கும். குறிப்பாக, ஒருவரது ஜனாஸா தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு செய்யும் துஆ மற்றும் ஷஃபாஅத் (பரிந்துரை) அவரது பாவங்கள் மன்னிக்கப்படக் காரணமாகிறது.
குறிப்பு -(ஜனாஸா தொழுகை என்றாலே துஆ தான் ஆனால் அந்த தொழுகையை தொழ வைத்த பின்பு கூட்டு துஆ ஓதுவது என்பது நபி வழிக்கு முரணானது , மையத் அடக்கப்பட்ட பின்பு துஆ செய்து கொள்ளலாம் அதற்கு ஆதாரம் உண்டு அதுவும் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்)
5️⃣. மரணித்தவருக்காகச் செய்யப்படும் நற்செயல்கள்
ஒருவர் மரணித்த பிறகு, அவரது உறவினர்கள் அல்லது நலம் விரும்பிகள் அவர் சார்பாகச் செய்யும் தர்மங்கள் (ஸதகா), கிணறு வெட்டுதல், ஹஜ் அல்லது நிறைவேற்றாத நோன்புகளை நோற்பது போன்ற நற்செயல்கள் அவரது தண்டனையைக் குறைக்கின்றன.
6️⃣. நபி ﷺ அவர்களின் ஷஃபாஅத் (பரிந்துரை)
மறுமை நாளில் பெரும் பாவங்களைச் செய்த தனது உம்மத்தினருக்காக நபி ﷺ அவர்கள் செய்யும் ஷஃபாஅத் பாவங்களைப் போக்கும். (சிறிய பாவங்கள் தொழுகை, நோன்பு போன்ற நன்மைகளாலேயே மன்னிக்கப்பட்டு விடுவதால், பெரும்பாவம் செய்தவர்களுக்கே நபி ﷺ அவர்களின் பரிந்துரை
முதன்மையாகத் தேவைப்படுகிறது)
7️⃣ துன்யாவில் ஏற்படும் சோதனைகள்
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், கவலைகள், மனக்கஷ்டங்கள், இழப்புகள் மற்றும் ஒரு முள் தைப்பது வரை ஏற்படும் அனைத்துச் சோதனைகளும் பொறுமையைக் கடைப்பிடிக்கும் போது பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன.
8️⃣. கப்ரின் நெருக்கடியும் அச்சமும்
ஒருவருக்குக் கப்ரில் ஏற்படும் சோதனை, நெருக்கடி மற்றும் அச்சம் ஆகியவை அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்து குற்றங்களைப் போக்குகின்றன.
9️⃣. மறுமை நாளின் திகில்களும் பயங்களும்
மறுமை நாளில் ஏற்படும் கோரமான காட்சிகளும், கடுமையான கஷ்டங்களும் விசாரணைக்கு முன் ஒரு அடியானின் பாவங்களை அழிக்கக் காரணமாகின்றன.
🔟. அல்லாஹ்வின் அளப்பரிய ரஹ்மத்தும் கிருபையும்
எந்தக் காரணமும் இன்றி அல்லாஹ் தன் அடியார்களுக்குச் செய்யும் அளப்பரிய அருளும், மன்னிப்பும், கருணையுமே அனைத்திலும் முதன்மையானதும் இறுதியானதும் ஆகும்.
💡 எச்சரிக்கை & அறிவுரை:
இந்த 10 காரணங்களும் ஒருவரை நரகத்திலிருந்து காக்க அல்லாஹ் அமைத்த வாய்ப்புகளாகும். முதல் மூன்று காரணங்களிலேயே (தவ்பா, இஸ்திக்பார், நற்செயல்கள்) நமது பாவங்களைச் சரிசெய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இந்த 10 வழிகளில் ஒன்றைக் கூடப் பயன்படுத்தாமல், கடைசி வரை பாவத்திலேயே மூழ்கி மரணிப்பவன் மிகப்பெரிய நஷ்டவாளியாவான்.
அல்லாஹ் நம் அனைவரையும் அவனது மன்னிப்பையும் அருளையும் பெற்று சுவனம் செல்லும் நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்.
📚 நூல்கள்: مجموع الفتاوى
(மஜ்மூஉ அல்-ஃபதாவா)
தொகுதி / பாகம்: 7
(المجلد السابع – كتاب الإيمان)
பக்கங்கள்:487 முதல் 501 வரை
மேலும், தனது
«மின்ஹாஜுஸ் ஸுன்னா அல்-நபவிய்யா»
(منهاج السنة النبوية)
என்னும் நூலிலும் (பாகம் 6, பக்கம் 236-240) மற்றும் «அல்-அகீதா அல்-வாஸிதிய்யா»
(العقيدة الواسطية)
நூலின் இறுதியிலும் இந்த 10 விதமான பாவ நிவர்த்தி முறைகளை (المكفرات العشرة) அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- ✍️ உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
