June 29, 2026 · ஸலஃப் அறிஞர்களின் அழகிய உரைகள்

நபிமார்களின் வாழ்வு:அல்லாமா மாஹிர் யாசின் அல்-ஃபஹ்ல் அவர்களின் புகாரி வகுப்பின் உரைத் தொகுப்பு!

💥தொடர்-7️⃣💥

ஸலப்ஃ அறிஞர்களின் அழகிய உரைகள் .###


நபிமார்களின் வாழ்வு:அல்லாமா மாஹிர் யாசின் அல்-ஃபஹ்ல் அவர்களின் புகாரி வகுப்பின் உரைத் தொகுப்பு!

அறிமுக உரை:

ஈராக் நாட்டின் பிரபலமான ஹதீஸ் கலை வல்லுநர் அஷ்ஷைஹ் டாக்டர். மாஹிர் யாசின் அல்-ஃபஹ்ல் அவர்களின் "மஜாலிஸ் ஸஹீஹ் அல்-புகாரி"

(பாட எண்கள்: 3401-3450) என்ற தொடர் வகுப்பின் மிக ஆழமான, படிப்பினைகள் நிறைந்த உரைத் தொகுப்பு இது.

அரபு மொழியில் ஷைஹ் அவர்களின் வகுப்பை முழுவதும் கேட்க 👇

https://www.youtube.com/live/_whmv4aGihs?si=-J0kuiADa5uGWKJW

ஸஹீஹ் அல்-புகாரியில் இடம் பெற்றிருக்கும் குர்ஆனின் "அல்அன்பியா" (இறைத்தூதர்கள்) அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள மூஸா (அலைஹிஸ்ஸலாம்), ஹில்ரு (அலைஹிஸ்ஸலாம்), ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் பனூ இஸ்ராயீலர்களின் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு, இன்றைய காலகட்டத்து முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியலை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர் இந்நிகழ்வில் தெளிவுபடுத்துகிறார்.

அவ்வகுப்பைக் கேட்கும் ஒவ்வொருவரும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், அதன் கருத்துக்கள் மற்றும் மூல நூல் சான்றுகள் கீழே கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன:

1️⃣. நாவடக்கம் மற்றும் எழுத்துப் பேணல் (The Ethics of Refutations)

வகுப்பின் துவக்கத்திலேயே ஆசிரியர் தற்காலச் சூழலில் நிலவும் ஒரு முக்கியப் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இன்று பலர் பிறருக்கு மறுப்புரைகள் (ردود) வழங்குவதிலும், சமூக வலைத்தளங்களில் விவாதிப்பதிலுமே தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள். மார்க்க அறிஞர்கள் மற்றும் நல்லோர்கள் கோபத்தின் பிடியில் சில நேரங்களில் பயன்படுத்திய கடினமான வார்த்தைகளை நாம் பிறருக்கு எதிராக ஆதாரமாகக் காட்டக் கூடாது.

ஒரு முஃமின் தனது நாவையும் பேனாவையும் பக்குவப்படுத்த வேண்டும். நமக்கு முழுமையான முன்மாதிரி அகிலத்தின் அருட்கொடை நபி ﷺ அவர்கள் மட்டுமே.

2️⃣. கல்வியின் நோக்கம் மற்றும் வினா எழுப்பும் ஒழுங்கு

(Manners of Seeking Knowledge)

பனூ இஸ்ராயீலர்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம், "மனிதர்களில் மிக அதிக ஞானம் உள்ளவர் யார்?" என்று கேட்ட வினாவை ஆசிரியர் இங்கு அழகாக ஆய்வு செய்கிறார். இத்தகைய கேள்விகளால் சமுதாயத்திற்கு எந்த ஆன்மீகப் பயனும் இல்லை.

இன்று பலர் அறிஞர்களிடம் சென்று, "அவரா இவரா சிறந்த அறிஞர்?" என்று வீண் விவாதங்களைத் தோற்றுவிக்கிறார்கள்.

நம்முடைய கேள்விகள் அனைத்தும் நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்குவதாகவும், நம்முடைய அமல்களைச் சீரமைப்படுவதாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும், கல்வி தேடுவதும், மார்க்கப் பணி செய்வதும் முற்றிலும் அல்லாஹ்விற்காக மட்டுமே (لله تعالى) இருக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தை (நிய்யத்) வளர்க்க வேண்டும்.

3️⃣. கல்வித் தேடலில் சகிப்புத்தன்மை

(The Patience in Journey for Knowledge)

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மார்க்க ஞானத்தைத் தேடி ஹில்ரு (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கிப் பயணித்த போது, அல்லாஹ் கட்டளையிட்ட எல்லையைக் கடக்கும் வரை அவர்களுக்கு எந்தப் பயணக் களைப்பும் தெரியவில்லை. இதிலிருந்து, மார்க்கக் கல்வியை அடைவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள், தூக்கத்தைத் துறந்து மணிக்கணக்காக நூல்களை ஆய்வு செய்தல் போன்றவற்றில் ஏற்படும் சிரமங்கள் அனைத்தும் மறுமையில் அல்லாஹ்விடம் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

4️⃣. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் ஹில்ரு (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஞான ஒப்பீடு (

மூல நூல் சான்று: ஹதீஸ் 3401)

புகாரியின் புகழ்பெற்ற இந்த ஹதீஸின் மூலம் இருவருக்குமிடையிலான தகுதிகளை ஆசிரியர் பின்வருமாறு வேறுபடுத்திக் காட்டுகிறார்:

  • மூஸா (அலைஹிஸ்ஸலாம்): ஒரு தூதர் (ரசூல்), 'உலுல் அஸ்ம்'நபிகளில் ஒருவர், தவ்ராத் வேதத்தைப் பெற்றவர், அல்லாஹ்வுடன் நேரடியாகப் பேசியவர், மற்றும் சமுதாயத்தை வழிநடத்தும் பொதுத் தலைமையை (ولاية عامة) பெற்றவர். இவர்களின் கல்வி சமுதாயத்திற்கான சட்ட ஒழுங்கு (تشريعي).
  • ஹில்ரு (அலை): அல்லாஹ்விடமிருந்தே நேரடியாகப் பெற்ற பிரத்தியேக அகப்பார்வை ஞானம் (علم باطن / இல்முல் லதுன்னீ) மற்றும் சில எதிர்கால நிகழ்வுகளை அறியும் ஆற்றல் பெற்றவர். இவர்களுடைய பொறுப்பு தனித்துவமானது (ولاية خاصة).
  • அற்புதச் சான்று:

இவர்களின் சந்திப்பு நிகழ்விடத்தில் இறந்த மீன் உயிர் பெற்றுச் சென்றது போன்ற அற்புதங்கள் அல்லாஹ்வின் பேராற்றலுக்குச் சான்றாகும்.

5️⃣. பாவங்களின் ஆபத்தும் சோதனைகளும் (The Severity of Sins)

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் விவாத ஹதீஸை (ஹதீஸ்: 3409) விளக்கும் போது, மனித வாழ்வில் ஏற்படும் கவலைகள், மன உளைச்சல்கள் மற்றும் இழப்புகள் (شقاء وحرمان) அனைத்திற்கும் அவனுடைய பாவங்களே முதன்மைக் காரணம் என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். எளிய பாவங்கள் தானே என்று எதையும் சாதாரணமாகக் கருதக் கூடாது.

அதேபோல் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பனூ இஸ்ராயீலர்கள் உடல் ரீதியாகக் குறை கூறித் துன்புறுத்திய போது (ஹதீஸ்: 3403), அல்லாஹ் ஒரு கல்லின் மூலம் அவர்களின் தூய்மையை நிரூபித்தான்.

📌 வரலாற்றுப் பின்னணி:

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும், தன் உடலை ஆடைகளால் முழுமையாக மறைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் உடலில் ஒரு சிறிய பகுதியைக்கூட பிறர் பார்க்க முடியாத அளவுக்குப் பேணுதலாக இருந்தார்கள்.

ஆனால், பனூ இஸ்ராயீல் மக்களோ தீய எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இப்படித் தன் உடலை எப்போதும் மறைத்துக் கொள்வதைக் கண்டு, "அவருக்கு உடலில் ஏதோ பெரிய நோய் இருக்கிறது; ஒன்று வெண்குஷ்டம் (برص), அல்லது குடலிறக்கம் (ادر – அண்டவாதம்), அல்லது ஏதேனும் தீராத உடல் குறைபாடு இருக்கிறது. அதனால்தான் அவர் உடலைக் காட்ட மறுக்கிறார்" என்று அவதூறு பரப்பி, அவர்களை மனரீதியாகத் துன்புறுத்தினார்கள்.

🪨 கல்லின் மூலம் நிகழ்ந்த அற்புதம்:

அல்லாஹ் தன் தூதர் மீது சுமத்தப்பட்ட இந்த அவதூறை நீக்கி, அவர்களின் உடல் தூய்மையை மக்களுக்கு நிரூபிக்க நாடினான். ஒரு நாள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் தனியாகக் குளிப்பதற்காகச் சென்றார்கள்.

1. தங்களின் ஆடைகளைக் கழற்றி அங்கிருந்த ஒரு கல்லின் மீது வைத்தார்கள்.

2. அவர்கள் குளித்து முடித்ததும், ஆடையை எடுப்பதற்காக நெருங்கிய போது, அந்தக் கல் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆடையைச் சுமந்து கொண்டு ஓடத் தொடங்கியது!

3. இது அல்லாஹ்வினால் நிகழ்த்தப்பட்ட ஒரு இயற்கைக்கு மாறான அற்புதம் (خارق من خوارق العادة) ஆகும்.

4. திடுக்கிட்ட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களின் கைத்தடியை எடுத்துக் கொண்டு, "கல்லே! என் ஆடை! கல்லே! என் ஆடை!" என்று சத்தமிட்டபடி அந்தக் கல்லின் பின்னால் ஓடினார்கள்.

👥 மக்கள் முன் நிரூபிக்கப்பட்ட உண்மை:

ஆடையுடன் ஓடிய அந்தக் கல், பனூ இஸ்ராயீல் மக்களின் முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த சபையின் முன்பாகச் சென்று நின்றது. ஆடையைத் தேடி ஓடிவந்த மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அங்கே குழுமியிருந்த மக்கள் அனைவரும் ஆடையின்றிப் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் உடல் எத்தகைய குறைபாடும் இல்லாமல், அல்லாஹ் படைத்த படைப்புகளிலேயே மிக அழகான, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டிருப்பதை மக்கள் தங்கள் கண்களால் நேரடியாகக் கண்டனர். அவர்களுக்கு வெண்குஷ்டமோ அல்லது வேறு எந்த உடல் குறைபாடோ இல்லை என்பது தெளிவாக நிரூபணமானது.

அதன் பிறகு அந்தக் கல் நின்றது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் ஆடையை எடுத்து அணிந்து கொண்டு, தங்களை இவ்வளவு தூரம் ஓடவிட்டுத் துன்புறுத்திய கோபத்தில் அந்தக் கல்லைத் தங்களின் கைத்தடியால் அடித்தார்கள். அந்த அடியின் வடுக்கள் (தழும்புகள்) அந்தக் கல்லில் மூன்று, நான்கு அல்லது ஐந்து வடுக்களாகப் பதிந்தன என்று நபியவர்கள் விவரித்தார்கள்.

📖 திருக்குர்ஆன் வசனம்:

இந்தத் திருப்புமுனை சம்பவத்தைக் குறிப்பிட்டுத்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வரும் வசனத்தை இறக்கினான்:

"நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் இழைத்தோரைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அவர்கள் (அவர் மீது) கூறிய அவதூறிலிருந்து அல்லாஹ் அவரைத் தூய்மைப்படுத்தினான்; மேலும் அவர் அல்லாஹ்விடம் கண்ணியமிக்கவராக இருந்தார்."

— (அல்-குர்ஆன், 33:69)

படிப்பினை: அல்லாஹ் தன் தூதர்களையும் நல்லடியார்களையும் அவதூறுகளிலிருந்து பாதுகாக்க, சில நேரங்களில் உயிரற்ற பொருள்களைக் கூடப் பேசவோ அல்லது அசையவோ வைத்து அற்புதங்களை நிகழ்த்துவான் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு பெரும் சான்றாகும்.

இதிலிருந்து, நல்லவர்கள் தங்களுக்கு ஏற்படும் அவதூறுகளைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும்; அல்லாஹ் தன் தூதர்களையும் நல்லடியார்களையும் நிச்சயம் பாதுகாப்பான் என்ற பாடம் கிடைக்கிறது.

7. ஆன்மீகப் பேணுதலும் பார்வையின் பாதுகாப்பும் (Guardianship of Sight)

குழந்தையாக இருந்த போதே பேசிய மூன்று குழந்தைகளில் ஒருவரான ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்றையும், ஜுரைஜ் (ரஹிமஹுல்லாஹ்) என்ற நல்லவரின் வரலாற்றையும் (ஹதீஸ்: 3424) ஆசிரியர் தொட்டுச் செல்கிறார். ஜுரைஜ் தனது தாயின் அழைப்பிற்கு உடனே விடையளிக்காததால் ஒரு சோதனையைச் சந்தித்தார்.

இதை விளக்கும் போது, தற்காலத்தில் மனிதர்கள் தங்களின் கண்கள் மற்றும் ஸ்மார்ட் போன் மூலம் ஹராமான (தடுக்கப்பட்ட) காட்சிகளைப் பார்ப்பது என்பது அல்லாஹ் வழங்கும் ஒரு வகையான உடனடித் தண்டனையாகும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். யார் இவைகளிலிருந்து தன் பார்வையைப் பாதுகாக்கிறாரோ, அவரே அல்லாஹ்வின் உண்மையான அருளைப் பெற்றவராவார்.

7. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வருகையும் இறுதிநாள் எச்சரிக்கையும்

வகுப்பின் இறுதிப் பகுதியில், ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் உன்னதப் பண்புகளும்

(ஹதீஸ்: 3435),

இறுதிநாட்களில் அவர்கள் மீண்டும் பூமிக்கு இறங்கி வந்து சிலுவைகளை உடைத்து, பன்றிகளை அழித்து, நீதியான முறையிலான ஆட்சியை நிலைநாட்டுவார்கள்

(ஹதீஸ்: 3448) என்ற தீர்க்கதரிசனமும் விளக்கப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் பூமியில் பரவலான நீதியும் பொருளாதார வளமும் ஏற்படுவதால், மனிதர்கள் உலக ஆசைகளைத் துறந்து இறை வழிபாடுகளில் (ஸஜ்தா செய்வதில்) அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

📖 பிற முக்கிய ஹதீஸ் சான்றுகள்:

  • ஹதீஸ் 3404: நபியவர்கள் தர்மம் பங்கீடு செய்யும்போது ஒருவர் குறை கூறியபோது, "மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இதைவிட அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எனினும் சகித்துக் கொண்டார்கள்" என்ற நபியின் வாக்கு சகிப்புத்தன்மையை நமக்குக் கற்பிக்கிறது.
  • ஹதீஸ் 3406: "ஒவ்வொரு நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை" என்ற ஹதீஸ், பிற்காலத்தில் சமுதாயத்தை வழிநடத்துவதற்கான பொறுமையையும் பக்குவத்தையும் ஆடு மேய்த்தல் தருகிறது என்பதை விளக்குகிறது.
  • ஹதீஸ் 3411:

ஆண்களில் பலர் முழுமையடைந்துள்ளனர்; பெண்களில் ஆஸியா மற்றும் மர்யம் பின்த் இம்ரான் ஆகிய இருவர் மட்டுமே முழுமையடைந்தனர் என்ற ஹதீஸ் விளக்கம்.

  • ஹதீஸ் 3415: தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நோன்பு (ஒரு நாள் நோன்பு, ஒரு நாள் விடுப்பு) முறையே மிகச் சிறந்த, சமநிலையான நோன்பாகும்.
  • ஹதீஸ் 3418: நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது ஜின் (இஃப்ரீத்) தொழுகையில் இடையூறு செய்ய முயன்றதும், சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் துஆவை நினைவுகூர்ந்து நபியவர்கள் அதை விடுவித்ததும்.

மார்க்கக் கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அது நம் உள்ளத்தில் இறையச்சத்தையும், நடத்தையில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பணிவு, ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் உண்மைத்தன்மை, முன்னோர்களின் கல்வித் தேடல் போன்ற உன்னதப் பண்புகளை நம் வாழ்வில் கொண்டு வருவதே இத்தகைய புகாரி வகுப்புகளைக் கேட்பதன் உண்மையான நோக்கமாகும்.

அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களை மன்னித்து, மார்க்கக் கல்வியின் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற அருள் புரிவானாக!

✍️தமிழில்

  • உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி
All 32 parts
  1. நாம் வாழும் இந்த ஆபத்தான காலம்: நம் ஈமானைக் காப்பது எப்படி?
  2. நீங்கள் உண்மையான மகிழ்ச்சியை நாடினால்… இங்கிருந்து தொடங்குங்கள்!
  3. டாக்டர் அப்துல் கரீம் பக்கார் அவர்கள் தனது ஜூம் (Zoom) சொற்பொழிவில் “அறிவுசார் கல்வி” (Intellectual Education) மற்றும் இன்றைய டிஜிட்டல் யுகத
  4. அல்லாஹ்விடம் உண்மையாக வெட்கப்படுவது எப்படி?
  5. ஆபாசப் போதையிலிருந்து மீண்ட ஒரு இளைஞனின் உண்மைச் சம்பவம்! (மாபெரும் திருப்புமுனை)
  6. இஸ்லாமிய உம்மத்தின் எழுச்சியில் மார்க்க கல்வியை படிக்கும் மாணவர்களின் பங்கு!
  7. குழந்தைகளைச் செதுக்கும் 20 பொன்னான கல்விசார் சிந்தனைகள்
  8. நபிமார்களின் வாழ்வு:அல்லாமா மாஹிர் யாசின் அல்-ஃபஹ்ல் அவர்களின் புகாரி வகுப்பின் உரைத் தொகுப்பு!
  9. வறண்ட செயல்பாடுகளின் ஏமாற்று வித்தை..!
  10. இமாம் அஸ்-சுப்கி மற்றும் இப்னு தைமிய்யா.. நீதியிலும் நடுநிலையிலும் உன்னத முன்மாதிரிகள்
  11. சுன்னாவின் காவலர்
  12. வெளித்தோற்றமும் மார்க்கக் கல்வியும்: இமாம் இப்னு உஸைமீன் அவர்களின் தர்பிய்யா
  13. அடிமைத்தனத்திலிருந்து அன்பின் சாம்ராஜ்யத்திற்கு
  14. வழிகெட்ட கூட்டங்களின் பொதுவான சிக்கல்: ஸலஃபுகளின் (ஸஹாபாக்களின்) புரிதலைப் புறக்கணிப்பது
  15. ஒரு கருப்புப் பையும், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் 18 வருட மனித நேயமும்!
  16. இறைவனின் பேரன்பும் ஆன்மாவின் மீட்சியும்: இமாம் இப்னுல் கய்யிம் அல்ஜவ்ஸிய்யா அவர்களின் ‘அஸ்-சிர்ருல் அஃழம்’ (பேரிரகசியம்) ஓர் ஆழமான ஆன்மீக ஆய
  17. இரும்புக் கம்பிகளால் பூட்ட முடியாத ஈமான்!
  18. இறைவனின் பேரமைப்பும் பேரண்டத்தின் பிரம்மாண்டமும்: “அல்லாஹ்வை மகத்துவப்படுத்துதல்
  19. உள்ளத் தூய்மையும் பாவ மீட்சியும்
  20. யோகாவின் மறைக்கப்பட்ட உண்மைகளும், சுன்னா மறுப்பாளர்களின் அபாயமும்: டாக்டர் ஹைஸம் தல்ஃத் அவர்களின் விரிவான ஆய்வு & விழிப்புணர்வு!
  21. சொர்க்கத்தின் இன்பங்கள், சொர்க்கப் பெண்களின் தன்மைகள் & சலஃபுகளின் ஈடற்ற தியாகங்கள்: ஷேக் அலி அல்-கர்னீ அவர்களின் மனதை நெகிழ வைக்கும் உரைத்
  22. அத்தியாயம் 353: பாவங்களுக்கான தண்டனைகள் கடுமையானவை; அவை நிச்சயமாக வந்தே தீரும்
  23. சமூக வலைத்தள நீதிமன்றங்களும் : வரம்பு மீறும்
  24. இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழிகாட்டல்: மன இச்சையை வென்று ஆன்மாவை ஆளும் வழி!
  25. தூய உள்ளமும் கனிவான அழைப்புப் பணியும்: இன்றைய அழைப்பாளர்களுக்கு ஒரு நினைவூட்டல்
  26. 73 இஃப்ரீத் ஜின்களின் தாக்குதலும், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் இணையற்ற ஈமானியப் போராட்டமும்!
  27. ஆதம் (அலை) அவர்களின் வரலாறும் மனிதனின் வாழ்வியல் போர்க்களமும்: ஒரு விரிவான ஆய்வுப் பார்வை
  28. குர்ஆனை ஓதுகிறீர்களா அல்லது அதன்படி வாழ்கிறீர்களா?” — இப்னு தைமிய்யாவின் சிந்தனைகளும், சிறைவாச இறுதிநாட்களும்!
  29. நபி ﷺ அவர்களின் வாழ்வில் அஸ்மா பின்த் அந்-நுஃமான் (ரழியல்லாஹு அன்ஹா) சம்பவம்
  30. ‘சஃப்வதுல் ஃஃபவாயித்’
  31. பாவங்களை அழித்து நரக தண்டனையிலிருந்து காக்கும் 10 வழிகள்!
  32. இரு புனிதத் தலங்களின் பூமிக்கும் உம்மத்திற்கும் எதிரான “மும்முனைத் தாக்குதல்கள்” (العدوان الثلاثي) – பின்னணி ஆபத்துக்களும் தீர்க்கமான தீர்வு
💬
AI Islamic Assistant

Assalamu Alaikum! Ask me about lectures, courses, books, or general topics on this site.

AI responses may be incomplete. For personal religious rulings, consult a qualified scholar.