💥தொடர்-2️⃣4️⃣💥
ஸலப்ஃ அறிஞர்களின் அழகிய உரைகள் .
73 இஃப்ரீத் ஜின்களின் தாக்குதலும், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் இணையற்ற ஈமானியப் போராட்டமும்!
அஷ்ஷைஹ் அபுல் பர்ரா அல்ஹில்லிஸ் என்ற அறிஞர் கீழ்காணும் ஒரு காணொளியில் இந்த சம்பவத்தை விளக்குகிறார் .
அரபு மொழியில் கேட்க 👇
https://youtu.be/fz_oMNsGn3o?si=NnPjAcHKhS9NNjus
https://youtu.be/DYjsfp0mRcw?si=ma1zu7tVoFhFIbFw
1️⃣. ஆவணச் சான்று மற்றும் நூலக வரலாற்றுச் செய்தி
இச்சம்பவம் அச்சிடப்பட்ட நூல்களான «மஜ்மூஉல் ஃபதாவா- مجمع الفتاوى» அல்லது «ஜாமியுல் மஸாஇல்-
جامع المسائل» அஷ்ஷைஹ் பக்கர் அபூ சைத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட புத்தகத்திலோ இடம்பெறவில்லை.
மாறாக, துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள அயாஸோபியா (Ayasofya) நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அச்சிடப்படாத இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அரிய கையெழுத்துப் பிரதியிலிருந்து (Manuscript) கண்டெடுக்கப்பட்டதாகும்.
ஹதீஸ் கலை அறிஞர் அஷ்ஷைக் அபூ உபைதா மஷ்ஹூர் ஹஸன் ஆல்-சல்மான் (حفظه الله) அவர்கள் இக்கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்து, "இது மிகவும் பயனுள்ள மற்றும் வியக்கத்தக்க வரலாற்றுச் செய்தி" என்று பாராட்டித் தனது நூலில் சேர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
2️⃣. நேரில் கண்டு அறிவித்த முதன்மைச் சான்றாளர்கள்
இச்சம்பவம் முற்றிலும் உண்மையானது என்பதற்குப் பின்வரும் சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன:
1. அபுல் அப்பாஸ் அல்-பாஃலபக்கி அஷ்-ஷாஃபிஈ
- ابو العباس البعلبكي الشافعي:
இப்னு தைமியா அவர்களின் நெருக்கமான மாணவர்கள் ஒருவரான இவர் நேரில் சென்று இப்னு தைமிய்யா அவர்களிடம் இச்சம்பவத்தைக் கேட்டு உறுதிப்படுத்தினார்.
2. அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்:
இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நிழல் போல உடனிருந்து சேவை செய்த அவர்களின் சகோதரர், இச்செய்தி உண்மை என உறுதிப்படுத்தினார்.
3. ஜின்களைக் கையாளும் நபர்களின் சாட்சியம்:
ஜின்களுடன் தொடர்பிலிருந்த அந்த காலத்தில் வாழ்ந்த ருகாதுகள்-ஓதி பார்ப்பவர்கள் மூலம் அல்-பஅல்பக்கி விசாரித்து ஜின்கள் இவ்வாறு நடந்து கொண்டனவா என்று ஜின்களுடன் அந்த ருகாதுகள் உரையாற்றி உறுதி செய்தார்.
4. இப்னுல் கையிம் :
தனது «மதாரிஜுஸ் ஸாலிகீன்» நூலில் இச்சம்பவம் குறித்துச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
3️⃣ 73 இஃப்ரீத் ஜின்களின் படையெடுப்பும் பின்னணியும்
இச்சம்பவம் ஹிஜ்ரி 723 ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது
(இப்னு தைமிய்யா அவர்கள் மரணிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்).
- பின்னணி:
இப்னு தைமிய்யா அவர்கள் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலிலிருந்து ஜின்களை அடித்து விரட்டியதாலும், தர்ஹாக்கள் மற்றும் போலி ஆன்மீகவாதிகளிடம் ஜின்கள் பேசும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதாலும் ஆத்திரமடைந்த ஜின்கள், அவரைக் கொல்வதற்காக ஜின்களிலேயே மிகவும் கொடூரமான 73 'இஃப்ரீத்' (العفريت) ஜின்களின் படையை தேர்ந்தெடுத்து அனுப்பின.
- தாக்குதல் முறை
(குர்ஆன் உவமை):
ஜின்கள் இப்னு தைமிய்யா அவர்களின் தோள்கள் மீது ஏறி, கழுத்திலும் உடலிலும் கயிறுகளைக் கட்டி இழுத்துக் கொல்ல முயன்றன.
இது குர்ஆனில் ஷைத்தான் கூறிய "லா அஹ்தனிகன்ன துர்ரியத்தஹு" (அல்-இஸ்ரா: 62) எனும் வசனத்திற்கு ஒப்பானதாகும்.
قَالَ أَرَءَيۡتَكَ هَٰذَا ٱلَّذِي كَرَّمۡتَ عَلَيَّ لَئِنۡ أَخَّرۡتَنِ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَأَحۡتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلًا
(அன்றியும்,) “என்னைவிட மேலாக நீ கண்ணியப் படுத்திய (ஆதமாகிய) இவரை நீ பார்த்தாயா? என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி (வாழ) வைத்தால், சிலரைத் தவிர இவருடைய சந்ததியினரை நான் (வழி கெடுத்து) திண்ணமாக வேரறுத்து விடுவேன்?” என்று (இப்லீஸாகிய) அவன் கூறினான்.
(அல்குர்ஆன் : 17:62)
'அஹ்தனிக்' (வேரறுத்து விடுவேன் )என்றால் ஒரு மிருகத்தின் வாயில் கடிவாளம் பூட்டி அதைத் தன் விருப்பப்படி நடத்துவது போல் மனிதனைக் கட்டுப்படுத்துவதாகும்.
- ஜின்களின் அழிவு:
இப்னு தைமிய்யா அவர்கள் அஞ்சாமல், முழு நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் எண்ணங்களில் திக்ருகளையும் குர்ஆன் வசனங்களையும் ஓதினார். அந்த இறைவசனங்களின் ஒளியினால் 73 ஜின்களில் பெரும்பாலானவை எரிந்து அழிந்தன; எஞ்சியவை ஓட்டம் பிடித்தன.
4️⃣. ஜின்களின் தாக்குதலிலும் இப்னு தைமிய்யா உறுதியோடு இருந்ததற்கான முதன்மைக் காரணங்கள்
இத்தகைய கொடூரமான ஜின்களின் தாக்குதலின் போதும் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அசையாத ஈமானோடு நிலைத்து நின்றதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன:
1. தனிப்பட்ட வணக்க வழிபாடுகளில் காட்டிய அபார கவனம்:
- திக்ரில் மூழ்குதல்:
இப்னு தைமிய்யா அவர்களின் முதன்மை மாணவரான இப்னுல் கையிம் அல்-ஜவ்ஸிய்யா அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின் தனது ஆசிரியரைச் சந்திக்க பள்ளிவாசலுக்கு வருவார். ஆனால் இப்னு தைமிய்யா அவர்களோ சுப்ஹு முடிந்து லுஹர் வரை தொடர்ந்து இறை நினைவிலும் (திக்ரிலும்) அமர்ந்திருப்பார்கள். "அல்லாஹ் காலை உணவை எனக்கு இந்த திக்ரின் மூலமே தந்துவிட்டான்; இதுதான் எனது பலம்!" என்று கூறுவார்கள்.
- இரவுத் தொழுகையும் இஸ்திஃபாரும்:
தொடர்ச்சியாகப் புத்தகங்களை எழுதுவது, மார்க்க அழைப்புப் பணி செய்வது எனப் பல வேலைகள் இருந்தாலும், அவர்கள் இரவுத் தொழுகையை (தஹஜ்ஜுத்) ஒருபோதும் தவறவிட்டதில்லை. மேலும், தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்து வந்ததாக அவர்களின் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
2. மார்க்கத்தின் வரம்புகளில் கொண்டிருந்த அசையாத உறுதி:
- இப்னு தைமிய்யா இந்த ஜின்களின் தாக்குதலில் மூன்று நாட்கள் வரை துன்புறுத்தப்பட்ட பொழுது அவர்களின் சகோதரர் குறிப்பிடுகையில்: "அல்லாஹ் எதை ஹலால் ஆக்கினானோ அதுதான் ஹலால்; எதை அவன் ஹராம் ஆக்கினானோ அதுதான் ஹராம்!" என்று கூறிக்கொண்டே இருந்தார்களாம் . மார்க்கத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக நின்றார்கள்.
5️⃣. ஜின்களின் போலிச் சலுகைகளும், சிறைப்படுத்திய எதிரிகளை மன்னித்த நற்பண்பும்
- போலிச் சலுகைகளை நிராகரித்தல்:
டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் போலி ஆன்மீகவாதிகள் காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது போன்ற ஜின்களின் சலுகைகளைப் பெற்றுத் தங்களைக் 'கராமத்' உடையவர்கள் என்று கூறி மக்களை வழிகெடுத்தனர். ஜின்கள் இப்னு தைமிய்யா அவர்களிடமும் வந்து, எங்களை எதிர்ப்பதை நிறுத்தினால் இத்தகைய சலுகைகளைத் தருவதாகக் கூறிய போது:
"இந்தச் சலுகைகளை நீங்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலியல்லாஹு அன்ஹும்) போன்ற மாபெரும் நபித்தோழர்களுக்குக் கொடுத்தீர்களா? உங்களுடைய எந்தச் சலுகையும் எனக்குத் தேவையில்லை! அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்ற ஷைத்தான்களே! என்னை விட்டு விலகி ஓடுங்கள்!" என்று கூறி விரட்டினார்கள்.
அந்நேரத்தில் வான்வழியே தோன்றி ஜின்களைத் தாக்கி விரட்டிய ஒளியாலான பிரகாசமான நட்சத்திரத்தைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடும் போது, "அது என்னவென்று நமக்குத் தெரியாது; அல்லாஹ்வே அதை மிக அறிந்தவன்" எனக் கூறினார்.
- எதிரிகளை அல்லாஹ்விற்காக மன்னித்தல்:
ஜின்கள் இப்னு தைமிய்யா அவர்களிடம், "உங்களை மீண்டும் மீண்டும் சிறையில் அடைத்து, துன்புறுத்திய உங்கள் எதிரிகளை நாங்கள் கொன்று விடுகிறோம்" என்று சலுகை ஆசை காட்டிய போது, அதற்கு இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்:
"வேண்டாம்! என்னைச் சிறையிலடைத்த எனது எதிரிகளை நான் அல்லாஹ்வுக்காக மன்னித்துவிட்டேன்! பிறரை மன்னிப்பதே நல்லடியார்களின் பண்பு!"என்று கூறி, ஜின்களின் எந்தவிதமான உதவியும் தனக்குத் தேவையில்லை என்று கூறி ஜின்களின் மாய வார்த்தையில் சிக்கவில்லை அவற்றை அடியோடு விரட்டி அடித்தார்கள்.
6️⃣. நோய்களும் ஷைத்தானியத் தொடர்பும் (ஹதீஸ் மற்றும் குர்ஆன் ஆதாரங்கள்)
ஆசிரியர் நோய்களுக்கும் ஷைத்தானியத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்தினார்:
1. கொள்ளைநோய் (Ta'un / Plague) பற்றிய ஹதீஸ்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
«الطَّاعُونُ وَخْزُ أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ»
"கொள்ளைநோய் (பிளேக்/காலரா போன்ற நோய்கள்) என்பது ஜின்களாகிய உங்கள் எதிரிகள் உங்களுக்கு ஏற்படுத்தும் குத்தலாகும் (தாக்குதலாகும்)."
(ஆதாரம்: المسند / الصحيحة).
நோய்கள் பரவுவதற்கும் மனித உடலை பலவீனப்படுத்துவதற்கும் ஜின்களின் ஊடுருவல்களும் நுண்மையான தாக்குதல்களும் ஒரு காரணமாக அமைகின்றன என்பதை இந்த ஹதீஸ் நிரூபிக்கிறது.
2. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குர்ஆன் கூற்று:
அய்யூப் நபி அவர்கள் நோயுற்ற போது இறைவனிடம் முறையிட்டதை குர்ஆன் கூறுகிறது:
وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٍ وَعَذَابٍ
மேலும் (நபியே!) நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனை அழைத்(துப் பிரார்த்தனை செய்)து “நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையும் கொண்டு தீண்டிவிட்டான்”
(அல்குர்ஆன் : 38:41)
3. அத்கார்களின் (திக்ருகளின்) பாதுகாப்பு:
காலையிலும் மாலையிலும் ஓதப்படும் அத்கார் (Adhkar) முறையான உணவையும் தண்ணீரையும் விட மனிதனுக்கு அவசியமானது. அதுவே இத்தகைய நோய்கள் மற்றும் ஜின்களின் தாக்குதல்களிலிருந்து காக்கும் அரணாகும்.
குறிப்பாக ஐந்து நேர தொழுகைக்கு பின் நபிமொழிகளில் கூறப்பட்டிருக்கும் ஆதாரமிக்க ஓதப்படும் திக்கருகள் & துஆக்கள்
ஜின்கள் சைத்தான்களுடைய தீங்கிளிலிருந்து மனிதனை பாதுகாக்கிறது, ஆனால் இமாம் ஜமாதாக தொழுகும் பொழுது மார்க்கத்தில் சொல்லப்படாத கூட்டுத் துஆக்களை செய்து கொண்டு நாம் செய்ய வேண்டிய சுன்னாவை புறக்கணித்து விடுகிறோம்.
7️⃣. குறிப்பிடப்பட்ட அரபு நூல்கள் (Books Mentioned)
1. فتح المنان في جمع كلام شيخ الإسلام ابن تيمية عن الجان (ஃபத்ஹுல் மன்னான்) – தொகுப்பு: ஷைக் மஷ்ஹூர் ஹஸன் ஆல-சல்மான்.
2. مدارج السالكين
(மதாரிஜுஸ் ஸாலிகீன்) – இமாம் இப்னுல் கையிம் அல்-ஜவ்ஸிய்யா.
3. مجموع الفتاوى
(மஜ்மூஉல் ஃபதாவா) – ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா.
4. جامع المسائل
(ஜாமியுல் மஸாஇல்) – ஷைக் பக்ர் அபூ ஸைத்.
5. مخطوطة مكتبة آيا صوفيا (அயாஸோபியா நூலகக் கையெழுத்துப் பிரதி).
- ✍️ உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி
